சொல்லிய சொல் அமிழ்தம்

அன்பு ஜெயா

அழியாப் புகழும் குன்றாத சுவையும் கொண்ட இரு பெரும் இலக்கியப் பனுவல்கள் சங்கப் பாடல்களும், கம்பன் காவியமும். அந்த இலக்கியங்களிலிருந்து இதயத்தை இனிக்கச் செய்த சிந்தையை வியக்கச் செய்த சில பகுதிகளை, இளைய தலைமுறையைத் தமிழின்பால் ஈர்க்கும் நோக்கோடு இங்கே எளிய தமிழில் அளிக்கிறோம்