Frequently Asked Questions

நூல்கள், செய்திகள், மின்னிதழ்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆவணங்கள், உரைகள், எழுத்தாளர்களின் பேட்டிகள் இவற்றை நீங்கள் ஒரே இடத்தில் வாசிக்க உதவும் இணையதளம். சுருக்கமாகச் சொன்னால் உங்கள் கையில் வான் வழியே ஒரு வாசகசாலை.
இல்லை. இது முற்றிலும் இலவச சேவை
ஆம். சொல் சார்ந்தவை (text based) , ஓவியங்கள், புகைப்படங்கள் கொண்டு மெருக்கூட்டப்பட்டவை (image based), காணொளிக் காட்சிகள் கொண்டவை (video books) என்று எல்லா வகையான நூல்களும் பதிப்பிக்கப்படும்.
ஆம். ஆனால் ஆங்கிலத்தில் மட்டும். இந்த சேவை தொழில்நுட்ப வசதிகள் கிடைப்பதையொட்டி பின்னர் தமிழுக்கும் விரிவாக்கப்படும்
உங்கள் படைப்புக்களை யூனிகோட் எழுத்துருவில் தட்டச்சு செய்து doc கோப்புகளாகவோ,txt கோப்புகளாகவோ editor@thisaigal.in என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். ஆசிரியர் குழு அவற்றின் தரம் சார்த்து அதை பதிப்பிற்கு ஏற்கும்
சொல் மாத்திரம் சார்ந்த (text based) நூல்களைப் பதிப்பிக்க எந்தக் கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. மற்ற வகை நூல்கள் (image based, video books, audio books) அதி நுட்ப தொழில்நுட்பங்களைக் கோருவதால் அவற்றைப் பதிப்பிக்க ஆகும் செலவை பிரதிகள் அனுப்புவோர் ஏற்க வேண்டும்.
இல்லை. இங்கு நூலகளை இலவசமாக வாசிக்ககலாம். இது புத்தகச் சந்தை அல்ல. நூலகம்
கிடையாது.நூல்கள் விற்கப்படுவதில்லை என்பதால் இந்தக் கேள்வி பொறுத்தமற்றது
இயலாது. இணைய இணைப்பில் வாசிக்கலாம்
நூலின் பெயரைக் குறிப்பிட்டு editor@thisaigal.in என்ற முகவரிக்கு மின்ன்ஞ்சல் செய்தால், நூலாசிரியர் அனுமதித்தால், அவற்றை PDF கோப்பாக அனுப்ப இயலும். ஆனால் இந்த சேவையைப் பெற கட்டணம் செலுத்த வேண்டும்
முடியும். கைபேசி, மடிக்கணினி, மேசைக் கணினி, டேப்லெட் என்ற எதில் வேண்டுமானாலும் வாசிக்கலாம். கைபேசியை அதிகம் பயன்படுத்துபவரானால் ஆண்ட்ராய்ட் appஐ தரவிறக்கம் செய்து கொள்ளலாம். அது இலவசம்
மனநிறைவு. மின்னூல்கள் வெளியீட்டையும், மின்வெளியில் தமிழ் வாசிப்பதையும் அதிகரிக்கச் செய்ய வேண்டும் என்பதுதான் நோக்கம். இன்று இணையத்தில் தமிழ் அருகுபோல் வேரோடி, ஆல் போல் தழைத்து நிற்கிறது. இணையத்தில் தமிழ் தழைத்திருக்கிற இந்த நேரத்தின் தேவை, அந்த எழுத்துக்கள் உதிரி உதிரியாகச் சிதறிப் போய்விடாமல் அவற்றை ஒரு வளமாகத் தொகுப்பது. நிகழ்கால நடவடிக்கைகளை ஊக்கப்படுத்தவும், எதிர்காலத்திற்கு இவற்றை ஓரிடத்தில் சேமித்து வைக்கவும் ஓர் களஞ்சியம் தேவை. அதற்கான முயற்சி இது.